வற் வரி அதிகரிப்பு: மக்கள் கிளர்ந்தெழும் நிலைக்கு வழியேற்படும் - சிறீதரன் எச்சரிக்கை
இதன் காரணமாக அரகலய போராட்டம் போன்ற அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழும் நிலைக்கு வழியேற்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மக்களுக்கு வருமானம் இல்லை, இந்த நிலையில் மக்களின் இயல்பான வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக அரகலய போராட்டம் போன்ற அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழும் நிலைக்கு வழியேற்படும். சுயமாக மக்களின் நலன்களை பற்றி அரசு சிந்திக்காது சர்வதேச நாணய நிதியத்திற்காகவே செயற்படுகிறது.
ஆனால், தேர்தலும் நடைபெறவில்லை. தமிழ் மக்களின் ஆதரவை எப்படி பெறுவது என்ற நோக்கத்தோடு தான் அவர் வடக்கிற்கு வருகிறார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.






Post a Comment