இந்த ஒக்டோபர் மாதம், கனேடிய அரசு முதல் தமிழ் கனேடியனை பெண்கள் வரலாறு மாதத்தில் கொண்டாடுகின்றது. இந்த அங்கீகாரம் அவர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உட்புரிவில் சமத்வம் முக்கியபடிக்கு அவர் அர்ப்பணம் கொண்டதற்காக என்பதாகும்.
அவர்கள் மாற்றத்தை உருவாக்கி நன்கு திட்டமிட்டு நல்லதொரு எதிர்காலத்தை வளர்த்து வருகின்றனர். டொக்டர் ரெட்ணம் அவர்கள் தான் வளர்ந்து, வாழ்ந்து, பணி செய்கின்ற ஸ்காபுரோவில் பலமான ஒரு வலுச் சேர்க்கும் வேரைக்கொண்டுள்ளார்.
அவர் நியூரோபயாலஜியில் UTSC PHD பட்டதாரியாவார். அங்கு அவருடைய ஆராட்சி மூளையின் நோய் எதிர்ப்பு செல்களான மைக்ரோக்லியா, பக்கவாதத்திற்குப்பிறகு வீக்கத்தை எவ்வாறு கட்டுப்படுத்துகிறது என்பதில் கவனம் செலுத்துகிறது.
அறிவியல் துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி பேசுவதற்காக, டாக்டர் மெலனி ரெட்னம் கனடா முழுவதும் பயணம் செய்துள்ளார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் கனடியப் பெண்களுக்கான சங்கத்துடன் (Society for Canadian Women in Science & Technology) கனடா முழுவதும் அவரது பணி பரவியுள்ளது. நகர மட்டத்தில் ரொறன்ரோ , ஸ்காபுரோ பல்கலைக்கழகம் மற்றும் ரொறன்ரோ பாடசாலைகள் மூலம் அவர் 1000 க்கு மேற்பட்ட தொடக்க, உயர்நிலைப் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழிகாட்டியாக உள்ளார். மேலும் அவர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் காலநிலை மாற்றம், உணவு பற்றாக்குறை, போக்குவரத்து போன்ற இன்றயகாலங்களில் மிகவும் இன்றியமையாத உலகளாவிய சவால்களை சமாளிக்க தன்னை பின்பற்றும் மாணவர்களை ஊக்குவிக்கிறார். நீங்கள் கனேடிய அரசாங்கத்தின் இடுகையை Linkedin மற்றும் Facebook இல் பார்க்க முடியும்.



Post a Comment