மலேஷியாவில் நடைபெற்ற 35 ஆவது ஆசிய மெய்வல்லுநர் - 2023 (35th Malaysian international open masters athletics championships) போட்டியில் சாதனை படைத்த புத்தளம் மண்ணின் மைந்தர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பாராட்டியுள்ளார். 


உயரம் பாய்தலில் தங்கப்பதக்கம் பெற்ற ஹுமாயூன் மற்றும் 200 மீற்றர் ஓட்டப்போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்ற துபைல் ஆகியோரை வாழ்த்தி, வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது,


"இப்போட்டியில் இவர்கள் பெற்ற சாதனைகள் புத்தளம் மண்ணைப் பெருமைப்படுத்தியுள்ளது. ஒரே தாயின் புதல்வர்களான இவர்களின் முன்னுதாரணம் ஏனைய தாய்மார்களின் பிள்ளைகளையும் உற்சாகப்படுத்தும். 


புத்தளம் ஸாஹிரா பாடசாலையின் பழைய மாணவர்களான இவ்விரு சகோதரர்களும் உடற்கல்விப் போதனாசிரியர்களாவர். போதித்தது போல சாதித்தும் காட்டியுள்ள இவர்களின் வழிநடத்தல்களைப் பின்பற்றி, ஏனையோரும் தேசிய மற்றும் சர்வதேசத்திலும் கீர்த்தி பெற வாழ்த்திப் பிரார்த்திக்கின்றேன்."