திருமண உறவும் கண்குளிரும் வாழ்வும் நூல் வெளியீட்டு நிகழ்வு
எம். எச். அப்துர் ரஷீத் அவர்கள் எழுதிய திருமண உறவும் கண்குளிரும் வாழ்வும் என்ற நூல் வெளியீடு விழா எதிர்வரும் 04 ஆம் திகதி சனிக்கிழமை அனுராதபுரம் CTC வரவேற்பு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் Rajarata EDU Network ஊடாக கடந்த வருடம் சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு பாடசாலை மட்டத்தில் மாணவர்களுக்காக நடத்தப்பட்ட சிறுகதை, கவிதைப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்படவுள்ளது.
இந்நூல் குடும்ப வாழ்க்கை, பிள்ளை வளர்ப்பில் பெற்றோர் பொறுப்புகள் என்பவற்றுக்கான பல்வேறு நடைமுறைச் சாத்தியமான சிந்தனைகளையும் வழிகாட்டல்களையும் இஸ்லாமிய நோக்கிலும் நவீன உளவியல், சமூகவியல் கோட்பாடுகளின் பின்புலத்திலும் முன்வைத்துள்ளதோடு, அவற்றை எமது வாழ்வில் கட்டங்கட்டமாக அமுலாக்கம் செய்வதற்கான பயிற்சித் திட்டத்தையும் வழங்கியுள்ளமை விஷேட அம்சமாகும்
வட மத்திய மாகாணக் கல்வித் திணைக்களத்தின் அபிவிருத்திப் பிரிவுகக்குப் பொறுப்பான மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ. அப்துஸ் ஸமத் (நளீமி, SLEAS-1) அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வுக்கு ஓய்வுபெற்ற அதிபரும் எழுத்தாளருமான கலாபூஷணம் அன்பு ஜவஹர்ஷா பிரதம அதிதியாகக் கலந்து கொள்கிறார்.
.jpeg)
Post a Comment