உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - பிணை நிராகரிப்பு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப் போவதாகத் தகவல் அறிந்தும் பொலிஸாரிற்கு அறிவிக்காமல் தாக்கதலிக்கு ஒத்துழைத்தாக குற்றம் சாட்டப்பட்ட தற்கொலைக் குண்டுதாரிகளின் சகோதரர் இன்சாப் அஹமட் மற்றும் இல்ஹாம் அஹமட் ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (27) மறுத்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இந்தத் தீர்மானத்தை அறிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர் மூன்று வருடங்களாக விளக்கமறியலில் உள்ளதால், அவரை பிணையில் விடுவிக்குமாறு அவரது சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
குறித்த வழக்கின் முதலாம் மற்றும் இரண்டாவது பிரதிவாதிகள் முதுமை மற்றும் குற்றச் செயல்களின் தன்மை என்பனவற்றை கருத்திற்கொண்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.



تعليقات
إرسال تعليق
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK