முஸ்லிம் திணைக்களத்தின் பதில் பணிப்பாளராக சதுரி பிண்டோ
புதிய பணிப்பாளர் தெரிவுக்கான நேர்முக பரீட்சை நிறைவு
முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு பதில் பணிப்பாளராக கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி. சதுரி பிண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளரினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஒன்றரை வருடகாலமாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய இப்ராஹிம் அன்ஸார் கடந்த டிசம்பர் 30 ஆம் திகதியுடன் ஓய்வு பெற்றுச் சென்றதையடுத்தே இப்புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த இரு அதிகாரிகள் இத்திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர்களாக நீண்ட காலமாக தொடர்ந்தும் கடமையில் இருக்கும் போதே இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு முஸ்லிம் அல்லாத ஒருவர் குறிப்பாக பெண் ஒருவர் முதன் முதலில் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
எனினும் புதிதாக நியமனம் பெற்றுள்ள பதில் பணிப்பாளர் கடந்த (04.01.2023) கடமையை பொறுப்பேற்கவில்லை என திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு ஒரு புதிய பணிப்பாளர் விரைவில் நியமிக்கப்படுவார் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க எமது ஊடகத்துக்கு தெரிவித்தார். இப்பதவிக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கான நேர்முகப்பரீட்சை கடந்த புதன்கிழமை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சில் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.




تعليقات
إرسال تعليق
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK