போராட்டத்திற்கு தயாராகிவரும் இலங்கை தாதியர் சங்கம்!


தாதியர் சேவையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சு முன்வராமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட அகில இலங்கை தாதியர் சங்கம் தீர்மானித்துள்ளது.

கொழும்பு பொது நூலகத்தில் இன்று (8) நடைபெற்ற விசேட கூட்டத்தில் இலங்கை தாதியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எச்எம்எஸ்பி மடிவத்த இத்தகவலை தெரிவித்துள்ளார்.

تعليقات