பதியமிட்டோருக்கான கெளரவமும், விளைந்த பயிர்களின் மீளிணைவும்..
கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை தரம் 06 தொடக்கம் 11 வரை ஒரே வகுப்பில்(G-வகுப்பு) கல்வி கற்ற மாணவர்களின் ஒன்று கூடல் நிகழ்வு இன்று(18) பாடசாலையின் காரியப்பர் மண்டபத்தில் தொழிலதிபரும்,இக் கல்லூரியின் பழைய மாணவருமான எச்.எச்.எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் இம் மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டதோடு நினைவுச்சின்னம் மற்றும் பரிசில்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். இதே வேளை இம்மாணவர்களினால் இக் கல்லூரியின் தேவை கருதி கணனி ஒன்றும் அன்பளிப்பு செய்யப்பட்டது.
இதே வேளை இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஒய்வு பெற்ற மற்றும் தற்போதும் சேவையிலுள்ள ஆசிரியர்கள் தங்களின் கடந்தகால அனுபவங்களை இச்சபையில் பகிர்ந்து கொண்டனர்.இங்கு கலை,கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெற்றதோடு மறைந்த ஆசிரியர்களுக்காக விசேட துஆ பிராத்தனையும் இடம்பெற்றது.
எதிர்வரும் காலங்களில் இப்பாடசாலையின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் இவ்வகுப்பு பழைய மாணவர்களின் ஒத்துழைப்பும்,ஆதரவும் முழுமையாக இருக்கும் என்பதனையும் இம் மாணவர்கள் உறுதியளித்தனர்..


















تعليقات
إرسال تعليق
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK