தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டிருந்த நேரம் மாற்றப்பட்டுள்ளதாக பிரதம நிறைவேற்று அதிகாரி மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.


அதன்படி வார நாட்களில் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை தாமரை கோபுரத்தை பொதுமக்கள் பார்வையிடலாம்.

வார இறுதி நாட்களில் நேரங்கள் மாற்றப்படுகின்றன, அதன்படி தாமரை கோபுரத்தை காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை பார்வையிடலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுவரை இருந்த 2,000 ரூபா நுழைவுச்சீட்டு இனி வழங்கப்பட மாட்டாது என்றும், 500 ரூபா நுழைவுச்சீட்டு மட்டுமே வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.