இலங்கை மக்களுக்கு உதவ புதிய நன்கொடை திட்டம்


நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவும் நோக்கில், நன்கொடைத் திட்டம் ஒன்றை, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் ஆரம்பித்துள்ளது.

சுகாதாரம், கல்வி மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றில், இலங்கையின் வெற்றிகள், தற்போதைய நெருக்கடியால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதென ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி, டுவிட்டர் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

تعليقات