2021 ஆம் ஆண்டிற்கான சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்


இந்தாண்டு இடம்பெற்ற 2021 கல்வியாண்டுக்கான க.பொ.தர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த பரீட்சையின் பெறுபேற்று முடிவுகளை எதிர்வரும் நவம்பர்-டிசம்பர் மாத காலப்பகுதியில் வெளியிடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரீட்சைகள் திணைக்களம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

Comments