திருமலையில் அதிகாலையில் இடம்பெற்ற வாகன விபத்து
திருகோணமலை – ஹொரவ்பொத்தானை பிரதான வீதி சுகதகம பகுதியில் காரொன்று வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பொஷன் நிகழ்விற்காக அனுராதபுரம் சென்று மீண்டும் வீடு திரும்பிய போதே கார் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரில் மூவர் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மற்றைய கணவர் மனைவி பிள்ளை ஆகிய மூவரும் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ஹொரவ்பொத்தானை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அப்துல்சலாம் யாசீம்



تعليقات
إرسال تعليق
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK