அரச ஊழியர்கள் வெளிநாடுகளில் தொழில்புரியும் வகையில் சுற்றுநிருபம் வெளியிட அமைச்சரவை அனுமதி



சிரேஷ்டத்துவம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரச சேவையாளர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக அனுப்புவதற்கான சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு சுற்றுநிருபம் வெளியிட அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.


பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவினால் சமர்பிக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.


ஓய்வூதிய கொடுப்பனவு மற்றும் சிரேஷ்டத்துவத்திற்கு பாதிப்பு ஏற்படுவதன் காரணமாகவே சில அரச சேவையாளர்கள் வெளிநாடு சென்று சேவைகளில் ஈடுபட ஆர்வம் காட்டுவதில்லை.


இதன்படி, தற்போதைய சட்டத்தில் விரைவில் திருத்தங்களை மேற்கொண்டு புதிய சுற்றுநிருபத்தை வெளியிடவுள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.


تعليقات