போராட்டகாரர்களின் மனங்களில் வெறுப்பும் கைகளில் இரத்தமும் படிந்துள்ளன! - முன்னாள் பிரதமர் மஹிந்த!



பொருளாதார நெருக்கடி மக்கள் மத்தியில் குழப்ப நிலையை ஏற்படுத்தும் என்பது உண்மை. மக்களின் கோபத்தை வன்முறையாக கொண்டு செல்லும் சக்தி நாட்டில் தோற்றம் பெற்றுள்ளது என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ இன்று (10) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் தீவிரவாதம் அழிக்கப்பட்டு மரண அச்சுறுத்தல் இல்லாதொழிக்கப்பட்டது. ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரளவின் மரணத்தை தொடர்ந்து மக்கள் பிரதிநிதிகள் அவதானத்துடன் வீதிக்கு இறங்குகிறார்கள்.

போராட்டக்காரர்களின் மனங்களில் வெறுப்பும் கைகளில் இரத்தமும் படிந்துள்ளன. இது முறையற்றது. அன்று போராட்டகளத்தில் போராட்டத்தை தணிவடைய செய்ய அவ்விடத்தில் இருந்த மத தலைவர்கள் அவதானம் செலுத்தவில்லை என்றார்.

تعليقات