வத்தளையில் 23 வயது இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டமைக்கு காரணம் என்ன?


வத்தளை - எலகந்த ஹெந்தல வீதியில் இன்று பிற்பகல் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு இடையில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இன்று பிற்பகல் உந்துருளியில் வந்த இனந்தெரியாத இருவரினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த இளைஞர் ஒருவர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். 


மட்டக்குளி - அலிவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


இளைஞர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட இடத்தில் இருந்து ரீ-56 துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் ரவைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


அதன்படி, துப்பாக்கிச் சூட்டுக்கு ரீ-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். சந்தேக நபர்களை கைது செய்வதற்காக களனி காவல்துறை அத்தியட்சகரின் மேற்பார்வையின் கீழ் சில காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

تعليقات