தாக்குதல் அச்சம் -கொழும்பிலேயே குடும்பத்துடன் தங்கும் ஆளும் தரப்பு எம்.பிக்கள்


 எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள எதிர்ப்பு அலை காரணமாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கொழும்பில் உள்ள தமது உத்தியோகபூர்வ இல்லங்களிலேயே தங்கியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

கிராம மட்ட போராட்டத்தின் போது போராட்டகாரர்கள் அவர்களின் வீடுகளையும் தாக்கலாம் என்ற சந்தேகமே இதற்குக் காரணம்.

இது குறித்து பாதுகாப்பு படையினர் அவர்களை எச்சரித்துள்ளனர். கடந்த சில நாட்களாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பிரதிநிதிகளின் பல வீடுகளை போராட்டக்காரர்கள் சுற்றிவளைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

تعليقات