கொழும்பு காலி முகத்திடலில் குவியும் இளைஞர்,யுவதிகள்
ஜனாதிபதி கோட்டாவை பதவி விலக கோரி ஆர்ப்பாட்டம்
மாநகரெங்கும் பலத்த பாதுகாப்பு
கொழும்பு, காலி முகத்திடல் பகுதியில் தற்போது பெருந்திரளான இளைஞர், யுவதிகள் குவிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேசியக்கொடிகள் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளுடன் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
காலி முகத்திடலில் இன்றைய தினம் மக்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் அங்கு நிர்மாணப் பணிகளை முன்னிட்டு சில பகுதிகள் மூடப்பட்டுள்ளன.
ஒரு பகுதி மாத்திரம் மக்களுக்காக திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இந்த நிலையில் போராட்டத்திற்காக மக்கள் பலர் பேருந்துகளில் வரும் நிலையில் அப்பகுதிக்கு மக்கள் தொடர்ந்து வருகை தந்த வண்ணம் இருப்பதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
அரசிற்கு எதிராக போராட்டம் மேற்கொள்ளும் வகையில் அரசாங்கத்திற்கும் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கும் qஎதிராக வாசங்கள் எழுதப்பட்ட பதாதைகளுடன் மக்கள் காலி முகத்திடல் நோக்கி படையெடுத்து வருகின்றனர்.




تعليقات
إرسال تعليق
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK