திருகோணமலையில் குருதிக் கொடை வழங்கும் நிகழ்வு


இளைப்பாறிய மன்னார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் அதி வணக்கத்திற்குரிய கலாநிதி இராயப்பு ஜோசப் மற்றும் திருமறைக்கலாமன்றத்தின் நிறுவுனர் அருட்தந்தை வணக்கத்திற்குரிய கலாநிதி மரிய சேவியர் ஆகியோரின் முதலாம் ஆண்டு நினைவாக குருதிக் கொடை வழங்கும் நிகழ்வு  இடம்பெறவுள்ளது.

குறித்த நிகழ்வு நாளை (17) ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி முதல் மதியம் 1 மணி வரை இலங்கை செஞ்சிலுவை சங்க திருகோணமலை கிளையின் கட்டடத்தில் இடம்பெறவுள்ளது.

திருகோணமலை சிவில் சமூக அமைப்புக்களின் ஒன்றியம் மற்றும் இலங்கை செஞ்சிலுவை சங்கம் ஆகியன இணைத்து இதனை ஒழுங்கு செய்துள்ளன.

تعليقات