மக்கள் போராட்டத்தை மதித்தே பதவி துறப்பு - நாமல் கருத்து
"அரசுக்கு எதிரான மக்களின் போராட்டத்துக்குத் தலைவணங்கி அமைச்சுப் பதவியைத் துறந்துள்ளேன் என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ள நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
"நாடு என்றுமில்லாத பொருளாதார நெருக்கடியைச் சத்துள்ளது. இன்னமும் உரிய தீர்வு காணப்படவில்லை. இதற்கு ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை தான் பொறுப்புக்கூற வேண்டும்.
பொருளாதார நெருக்கடியால் மக்கள் மிகவும் கொதிப்படைந்துள்ளனர். அரசுக்கு எதிராக வீதிகளில் இறங்கி அவர்கள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், மக்களின் போராட்டத்துக்குத் தலைவணங்கியும் , புதிய அமைச்சரவையை நியமிக்குமாறு வலியுறுத்தியும் அமைச்சுப் பதவியைத் துறந்துள்ளேன்.
புதிய அமைச்சரவை தொடர்பிலும், பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு குறித்தும் ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து உரிய நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று நம்புகின்றேன்" என்றும் தெரிவித்துள்ளார்.



تعليقات
إرسال تعليق
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK