அரசுக்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெறுவதாக மூன்று முஸ்லிம் எம்பிக்கள் அறிவிப்பு
முன்னாள் பிரதி அமைச்சர் பைசல் காசிம், பாராளுமன்ற உறுப்பினர் இசாக் ரகுமான், பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக் ஆகியோர் அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்து உள்ளனர். பாராளுமன்றத்தில் இன்று விசேட அறிவிப்பொன்றை விடுத்த பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை, ஆளுங்கட்சியில் இருக்கும்போது தனக்கு ஒத்துழைப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், இன்று நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதில் அரசாங்கம் தோல்வியடைந்த காரணத்தினாலும், மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் தவறிவிட்டதாலும் நாங்கள் அரசுக்கு வழங்கிய ஆதரவை விலக்கிக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.



تعليقات
إرسال تعليق
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK