ரம்புக்கனையில் காயமடைந்தோர் எண்ணிக்கை 24ஆக அதிகரிப்பு


ரம்புக்கனை போராட்டத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 24ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்களில் 8 பொலிஸ் அதிகாரிகளும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலையேற்றம் காரணமாக பொதுமக்கள் இன்று 15 மணித்தியாலங்களுக்கு மேலாக ரம்புக்கனை புகையிரத கடவைக்கு அருகில் புகையிரத பாதையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதை தொடர்ந்து அங்கு மோதல் வெடித்தது.
ரம்புக்கணையில் ஆரப்பட்டம் செய்த மக்களை கலைக்க கண்ணீர்ப்புகை தாக்குதலை நடத்திய பொலிஸார் அதன் பின்னர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

تعليقات