20ஆவது திருத்தத்தை நீக்கி 19 ஐ கொண்டு வாருங்கள் - மைத்திரி

நாடு மிக மோசமான நிலையில் சென்று கொண்டிருக்கிறது. இதனை இப்படியே பார்த்துக் கொண்டிருக்க முடியாது.முழு சமூகமும் வீழ்ச்சியடைந்துள்ளதோடு, மருந்துகளுக்கு தட்டுப்பாடுகளுக்கு மத்தியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் எனமுன்னாள் ஜனாதிபதி சபையில் உரையாற்றும்போது கூறினார்.

   அதேநேரம், 20ஆவது திருத்தத்தை நீக்கி, 19ஆவது திருத்தத்தை கொண்டு வருவதன் மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்,

அவசரகால நிலைமை அமுல்படுத்தியுள்ளதையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டார்.

20 ஆவது திருத்தத்தை நீக்கி, 19 ஆவது திருத்தத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும். எனவே, இன்று முதல் நாங்கள் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளோம். அதன்படி, எங்களுடைய 14 உறுப்பினர்களும் சுயாதீனமாக செயற்படவுள்ளோம். என்றார்.



تعليقات