சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை வெளியானது!
இலங்கை தொடர்பான தமது அறிக்கையை சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்டுள்ளது.
எமது நாடு எதிர்கொள்ளும் கடுமையான பொருளாதார நெருக்கடி பற்றிய பகுப்பாய்வு இந்த அறிக்கையில் உள்ளடங்குகிறது.
அந்த அறிக்கையில், கொவிட்-19 இலங்கயைின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்ததுடன், இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை இழப்பு மற்றும் பல கடுமையான முடக்கங்கள் தேவைப்பட்டன.
அத்துடன், சர்வதேச நாணய நிதியம் (IMF), இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த நம்பகமான மற்றும் தெளிவான மூலோபாயங்களை உடன் அமுல்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.
மேலும் சமூக பாதுகாப்பை அவசரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
பெறுமதிசேர் வரி மற்றும் வருமான வரிகள் அதிகரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment