நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை? நாடு முடக்கப்படுவது குறித்து அறிவிக்கப்படலாம்
செய்திகள் வெளியிட்டுள்ளது.
இதன்போது நாட்டை முடக்குவது தொடர்பில் ஜனாதிபதியால் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில் நாட்டை முழுமையாக முடக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார தரப்பினரின் ஆலோசனைகள், பரிந்துரைகளுக்கு அமைய நாட்டை ஒரு வாரமாவது முடக்குமாறு மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்கர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையிலேயே நாளைய உரையில் ஜனாதிபதி இது குறித்து விசேட அறிவிப்பொன்றை விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Post a Comment