தனிமைப்படுத்தல் ஊடரங்கு சட்டம் முடிவுக்கு வருவது தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட தகவல் - FLASH NEWS - TAMIL


தனிமைப்படுத்தல் ஊடரங்கு சட்டம் முடிவுக்கு வருவது தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட தகவல்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தின் முதல் பத்து நாட்களிற்கு மாத்திரம் குறைந்த வருமானம் பெறுபவர்களிற்கு 2000 ரூபாய் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

மேலும்,தனிமைப்படுத்தல் ஊரடங்கு 14 நாட்களிற்கு நீடிக்கப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நீடிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கின் போது 5000 ரூபாய் வழங்கப்பட்டது. எனினும் இம்முறை 10 நாட்களிற்கு இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இரண்டாயிரம் ரூபாய் போதுமானதல்ல என்பதை ஏற்றுக்கொண்டுள்ளதுடன்,  எனினும் ஆகக்குறைந்தது இரண்டாயிரம் ரூபாயை வழங்குவதை பாராட்ட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தற்போது நிதி நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள போதிலும் மக்களின் நலன்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார். 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.