நாட்டில் இன்றைய தினம் முதல் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளன. இதன்படி 10 ரூபாவால் குறித்த உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்தோடு, பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, ஒரு கிலோகிராம் கேக்கின் விலையை 100 ரூபாவால் அதிகரிப்பதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இந்த விலை அதிகரிப்பானது இன்றைய தினம் முதல் அமுலுக்கு வரும் என சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயரட்ன ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.