25 ஆம் திகதி பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட மாட்டாது - வெளியாகியுள்ள தகவல் - FLASH NEWS - TAMIL


25 ஆம் திகதி பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட மாட்டாது - வெளியாகியுள்ள தகவல்


எதிர்வரும் 25 ஆம் திகதி அதிகாலை 4.00 மணி முதல் இரவு 11 மணி வரை நீக்க திட்டமிடப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடுகளை இரத்துச் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில் எதிர்வரும் 28 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் 25 ஆம் திகதி வீடுகளில் இருந்து ஒருவர் மாத்திரம் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகளை கொள்வனவு செய்ய வீட்டுக்கு வெளியில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை,பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் சட்டங்களை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணக்கட்டுப்பாட்டினை மீறும் நபர்களை கைது செய்வதற்காக 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.