இன்றிரவு 11 மணி முதல் நாடளாவிய பயணத் தடை - FLASH NEWS - TAMIL

இன்றிரவு 11 மணி முதல் நாடளாவிய பயணத் தடை


கோவிட் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு வசதியாக மீண்டும் இன்று இரவு 11 மணி முதல் 25ஆம் திகதி அதிகாலை நான்கு மணிவரை நாடளாவிய ரீதியில் பயணத் தடை விதிக்கப்படவுள்ளது.

கோவிட் வைரஸ் தடுப்புக்கான தேசிய மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் 25ம் திகதி அதிகாலை 4.00 மணிக்கு தளர்த்தப்படும் பயணத் தடை 19 மணித்தியாலங்களின் பின்னர் அன்றிரவு பதினொரு மணிக்கு மீண்டும் நாடளாவிய ரீதியில் நடைமுறைக்கு வரும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, மீளவும் அன்றைய தினம் இரவு 11 மணிக்கு நடைமுறைக்கு வரும் நாடளாவிய ரீதியிலான பயணத் தடை எதிர்வரும் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 4.00மணி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.