ஹரீன் பெர்ணான்டோ பெரும்பாலும் கைது செய்யப்படலாம்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோவை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றில் இடம்பெற்றுவரும் வாத பிரதிவாதங்களுக்கு இடையே நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இந்த விடயத்தை வெளியிட்டார்.
ஹரீன் பெர்ணான்டோவுக்கு குற்றவியல் பிரிவினரிடமிருந்து அழைப்பு வந்துள்ளதாகவும், இதன் காரணமாக அவர் பெரும்பாலும் கைது செய்யப்படலாம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டார்.
Siva Ramasamy

Post a Comment