எனது வாயை அடைக்க முடியாது! அரசிற்கு ஆனந்த தேரர் சவால் - FLASH NEWS - TAMIL


எனது வாயை அடைக்க முடியாது! அரசிற்கு ஆனந்த தேரர் சவால்


தன்னை திட்ட ஜனாதிபதிக்கு முடியாது என நாராஹென்பிட்டி அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

சிங்கள வலையொளி தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

என்னைக் கொலை செய்ய முடியும், ஆனால் எனது வாயை அடைக்க முடியாது. கொழும்பு துறைமுக நகரம் ஊடக தனியான வேறு நாடு உருவாகும்.

உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு நான் இதனைச் செய்யவில்லை. வாகனங்கள் மற்றும் கட்டங்களை வழங்கி என்னை விலைக்கு வாங்க முடியாது.

என்னை சஜித் பிரேமதாச வழிநடத்துவதாகக் கூறிய கருத்து, அமைச்சர் மகிந்தானந்த அளுத்மகேவின் உண்மைக்குப் புறம்பான கதை.

மற்றைய பிக்குமார் தற்போது பணம், வாகனங்களுக்காக தமது வாய்களை மூடிக்கொண்டுள்ளனர்.

அரசாங்கத்தை எதிர்த்தால், எமக்குக் கிடைக்கும் சலுகைகள் கிடைக்காமல் போகும் என்பதால், அவர்கள் அமைதியாக இருக்கின்றனர் எனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.