அஞ்சல் தொழிற்சங்கங்களினால் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுப்பு - FLASH NEWS - TAMIL


அஞ்சல் தொழிற்சங்கங்களினால் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுப்பு


சில அஞ்சல் துறை தொழிற்சங்கங்கள், நேற்று நள்ளிரவு முதல் 24 மணிநேர சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன.

அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு சேவை தொழிற்சங்கத்தின் தலைவர் சிந்தக்க பண்டார எமது செய்திச் சேவைக்கு இதனைத் தெரிவித்தார்.

ஆட்சேர்ப்பு முறைமையில் நிலவும் குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, இந்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறிருப்பினும், உடன் அமுலுக்குவரும் வகையில் அஞ்சல் திணைக்களத்தின் அனைத்து பணிக்குழாமினரின் விடுமுறைகளையும் இரத்துச் செய்வதற்கு அஞ்சல்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன நேற்று நடவடிக்கை எடுத்துள்ளார்.

அஞ்சல் தொழிற்சங்க நடவடிக்கையால், அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய நேற்று நள்ளிரவு முதல் இன்று நள்ளிரவு வரை, அனைத்து அஞ்சல் சேவையாளர்களின் விடுமுறைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

உடல்நலக் குறைப்பாட்டினால், சேவைக்கு சமூகமளிக்க முடியாத சந்தர்ப்பத்தில், அரச வைத்திய சான்றிதழ் முன்வைக்கப்பட வேண்டும் என அஞ்சல் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அறிவித்துள்ளார்

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.