அஸாத் சாலி கைதின் போது அவருடைய வாகனத்தில் வெளிநாட்டு கைத் துப்பாக்கி மற்றும் ரவைகள் மீட்ப்பு. - FLASH NEWS - TAMIL


அஸாத் சாலி கைதின் போது அவருடைய வாகனத்தில் வெளிநாட்டு கைத் துப்பாக்கி மற்றும் ரவைகள் மீட்ப்பு.


அசாத் சாலி கைது செய்யப்படும் போது அவர் பயணித்த மோட்டார் வாகனத்தில் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் அதற்குப் பயன்படுத்தப்பட்ட தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் குறித்த வாகனம் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது இவை கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்

கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

முன்னாள் ஆளுநர் அசாத்சாலி நேற்றைய தினம் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.