ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்க தீர்மானம்


COVID தொற்று காரணமாக மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் S.M.சந்திரசேன குறிப்பிட்டார்.

இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில், சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி இவ்விடயத்தைக் கூறியதாக  S.M.சந்திரசேன தெரிவித்தார்.

இது தொடர்பான வர்த்தமானியை இன்றே வௌியிட எதிர்பார்ப்பதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்

تعليقات