சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகளுக்கு தீர்வு வழங்கப்படவில்லை - FLASH NEWS - TAMIL


சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகளுக்கு தீர்வு வழங்கப்படவில்லை


தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு 2011 முதல் 2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி வரையில் கிடைக்கப்பெற்றுள்ள 89,405 முறைப்பாடுகளில் 40,668 முறைப்பாடுகளுக்கு இதுவரை தீர்வு வழங்கப்படவில்லை என அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய நாடாளுமன்ற குழுவான கோப் குழுவில் தெரியவந்துள்ளது.

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தொடர்பில் அண்மையில் இடம்பெற்ற கோப் குழு கூட்டத்தின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

கோப் குழுவின் தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சரித்த ஹேரத் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில், சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையால் 2016, 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுளுக்கான அறிக்கைகள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

அத்துடன் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்காக 3165 பாடசாலை சிறுவர் பாதுகாப்பு குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ள போதிலும், அவற்றில் தற்போது 2392 குழுக்கள் மாத்திரமே இயங்கும் நிலையில் காணப்படுகின்றன.

முறைப்பாடுகள் தொடர்பிலான நடவடிக்கையை மேற்கொள்வதற்காக சட்டத்தை அமுலாக்கும் பிரிவில் ஒரு குழு மாத்திரமே கடமையாற்றி வருகின்றமை கவலைக்குரிய விடயம் எனவும் கோப் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.