மன்னார் - எருக்கலம்பிட்டி பகுதியில் பயணக் கட்டுப்பாடுகள் விதிப்பு! - FLASH NEWS - TAMIL


மன்னார் - எருக்கலம்பிட்டி பகுதியில் பயணக் கட்டுப்பாடுகள் விதிப்பு!


மன்னாரில் உள்ள எருக்கலம்பிட்டி பகுதியில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 172 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், ரேபிட் ஆன்டிஜென் டெஸ்டிங் மற்றும் பி.சி.ஆர் சோதனைக்கு சுமார் 300 பேர் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

குடும்பத்தின் முதல் பாதிக்கப்பட்ட நபர், எருக்கலம்பிடி பகுதியில் வசிப்பவர் எனவும், புத்தலத்திலிருந்து வந்திருந்த நிலையில் அவருக்க தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்தும் குடும்பத்தின் மற்ற நான்கு பேரும் வைரஸால் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.