தகனம் செய்வதற்கு எதிராக செயற்பட்டுவரும் நீதி அமைச்சர் அலி சப்ரி மீது நடவடிக்கை எடுக்குமாறு சிங்ஹல ராவய, பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு. - FLASH NEWS - TAMIL


தகனம் செய்வதற்கு எதிராக செயற்பட்டுவரும் நீதி அமைச்சர் அலி சப்ரி மீது நடவடிக்கை எடுக்குமாறு சிங்ஹல ராவய, பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு.


நீதி அமைச்சர் அலி சப்ரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


சிங்ஹல ராவய தேசிய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரரே இந்த முறைப்பாடடை இன்று (22) பொலிஸ் தலைமையகத்தில் எழுத்துமூலம் கையளித்துள்ளார்.


கொரோனாவை கட்டுப்படுத்தவும் வைரஸ் பரவாமல் தடுக்கவும் அரசாங்கம் மேற்கொள்ளும் பொதுவான சட்டத்தை கடைப்பிடிப்பது நாட்டு மக்களது கடமை.



இவ்வாறான நிலையில், கொரோனாவினால் மரணிப்பவர்களை தகனம் செய்ய வேண்டும் என்ற அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிராக செயற்பட்டுவரும் நீதி அமைச்சர் அலி சப்ரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த முறைப்பாட்டில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.


கொவிட்டில் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை  அடக்கம் செய்ய அனுமதிக்காமல் எரிப்பதன் மூலம் முஸ்லிம் இளைஞர்கள் அடிப்படைவாதத்துக்கு தள்ளப்படலாம் என அண்மையில் அலி சப்ரி தெரிவித்திருக்கும் கருத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(படப்பிடிப்பு : ஜே. சஜீவகுமார்)

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.