கேகாலை, குருணாகலை மாவட்டங்களின் பல பகுதிகள் முடக்கம்!
கேகாலை மற்றும் குருநாகல் மாவட்டத்திற்கு உட்பட்ட சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
அதன்படி, கேகாலை மாவட்டத்தின் ஹெம்மாத்தகம, மாவனெல்லை, புளத்கோபிடிய ஆகிய பொலிஸ் அதிகார பிரிவுகள் மற்றும் கலிகமுவ பிரதேச சபை அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, குருணாகலை மாவட்டத்தின் கிரியுல்ல பொலிஸ் அதிகாரப் பிரிவுக்குட்பட்ட பகுதியும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன

Post a Comment