சமூக ஊடகங்களில் தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டதாக கூறி ஒருவர் கைது - FLASH NEWS - TAMIL


சமூக ஊடகங்களில் தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டதாக கூறி ஒருவர் கைது


கொரோனா வைரஸ் காரணமாக சாலைகளில் விழுந்து மக்கள் இறந்துவிட்டதாக கூறி சமூக ஊடகங்களில் தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டதாக கூறி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கண்டி - கடுகண்ணாவ பகுதியை சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக வீதிகளில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக போலியான புகைப்படங்களை இவர் பதிவிட்டிருந்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. இதேவேளை இவை தவறானவை என்று நேற்று செய்தியாளர்களிடம் துறையின் பேச்சாளர் தெரிவித்திருந்தார். அத்துடன் சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்களின் படி, 46 இறப்புகளில் ஒருவர் மட்டுமே கொரோனா வைரஸ் காரணமாக சாலையில் மரணமானமை பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.