மஹர சிறைச்சாலை அமைதியின்மை - 4 பேர் பலி!
இன்று (29) மாலை மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக உயிரிழந்த 04 பேரின் சடலங்கள் ராகமை வைத்தியசாலையில் உள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்அதேபோல், குறித்த சம்பவம் காரணமாக காயமடைந்த 24 கைதிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளினால் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ பிள்ளை தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதில் ஒரு தரப்பினர் சிறைச்சாலையினுள் தீ வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.



تعليقات
إرسال تعليق
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK