இலங்கையில் 4 சீனப் பிரஜைகளுக்கு கொரோனா! தூதரகம் அறிவிப்பு - FLASH NEWS - TAMIL


இலங்கையில் 4 சீனப் பிரஜைகளுக்கு கொரோனா! தூதரகம் அறிவிப்பு


கொழும்பு, கொட்டாஞ்சேனைப் பகுதியில் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுவந்த 4 சீனப் பிரஜைகளுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என கொழும்பில் உள்ள சீனத்தூதரகம் அறிவித்துள்ளது.

தூதரகம் இது குறித்த அறிக்கை ஒன்றை தமது உத்தியோகபூர்வ ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இவ்வாறு தொற்றுக்கு இலக்காகிய 4 சீனப் பிரஜைகளும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும் தூதரகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இவர்களுக்கு உள்ளூரில்தான் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சீனத்தூதரகம் வெளியிட்ட தமிழ் மொழிபெயர்ப்பு அறிக்கையில் பல்வேறு தமிழ் சொற்பிழைகளும் காணப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.