PCR பரிசோதனை இயந்திரத்தை திருத்தும் சீன தொழில்நுட்பவியலாளர்கள் இலங்கையில்..
(எம்.மனோசித்ரா)
முல்லேரியா வைத்தியசாலையின் ஆய்வு கூடத்தில் பழுதடைந்த பிரதான பி.சி.ஆர். மாதிரிகளை பரிசோதிக்கும் இயந்திரத்தை திருத்துவதற்காக சீன தொழில்நுட்ப குழு நேற்று (30) இரவு நாட்டை வந்தடைந்துள்ளது.
இலங்கையிலுள்ள சீன தூதரகம் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றினை இட்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கையின் உடனடி வேண்டுகோளுக்கமைய பி.சி.ஆர். சோதனைக் கருவிகள் உற்பத்தி நிறுவனத்திலுள்ள தொழில்நுட்பவியலாளர்களே இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளதாக அந்த பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வாரம் குறித்த இயந்திரம் பழுதடைந்ததையடுத்து சுமார் 20,000 மாதிரிகளின் முடிவுகள் தாமதமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



تعليقات
إرسال تعليق
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK