கடும்போக்குவாதிகளை திருப்திபடுத்தும் அரசியல் நாடகமே றிஷாட்டின் கைது முயற்சி! -இம்ரான் MP! - FLASH NEWS - TAMIL


கடும்போக்குவாதிகளை திருப்திபடுத்தும் அரசியல் நாடகமே றிஷாட்டின் கைது முயற்சி! -இம்ரான் MP!


அரசின் மீது அதிருப்தி அடைந்துள்ள கடும்போக்குவாதிகளை திருப்திபடுத்தும் அரசியல் நாடகமே றிஷாட்டின் கைது முயற்சி என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று மாலை இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் அணி தொடர்பான கலந்துரையாடலின் பின் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்....

நாட்டை சர்வதிகாரத்துக்கு இட்டுச்செல்லும் இருபதாம் திருத்த சட்டத்துக்கு பௌத்த பீடங்களே எதிர்ப்பு தெரிவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.கத்தோலிக்க ஆயர் பேரவையும் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

அத்துடன் ரியாஜ் பதியுதீன் விடுதலை செய்யப்பட்டமை அரசை ஆதரித்த கடும்போக்குவாதிகள் மத்தியில் அரசின் மீது பாரிய சந்தேகத்தை உண்டுபண்ணியுள்ளது.

எனவே அரசுக்கு எழுந்துள்ள இவ்வாறான எதிர்ப்புக்களை திசைதிருப்பி கடும்போக்குவாதிகளை திருப்திப்படுத்த பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீனை கைது செய்யும் நாடகம் ஒன்றை அரங்கேற்ற அரசு முயற்சிக்கிறது.

இந்த அரசியல் பழிவாங்கல்களில் இருந்து அவரை பாதுகாக்க ஐக்கிய மக்கள் சக்தி என்ற வகையில் நாம் அவருக்கு துணையாக நிற்போம்.


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.