இருபதாவது திருத்தத்திற்கு ஆதரவளிக்க முடியாது – மைத்ரி அதிரடி அறிவிப்பு ! - FLASH NEWS - TAMIL


இருபதாவது திருத்தத்திற்கு ஆதரவளிக்க முடியாது – மைத்ரி அதிரடி அறிவிப்பு !


அரசியலமைப்பின் இருபதாவது திருத்தம் நாடாளுமன்றில் நிறைவேற நடக்கும் வாக்கெடுப்பில் தம்மால் வாக்களிக்க முடியாதென முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன , ஜனாதிபதி கோட்டாபய , பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.

“ 19 ஆவது திருத்தத்தை கொண்டுவர முன்னிலையில் இருந்தவன் என்ற ரீதியில் மனச்சாட்சியின்படி என்னால் 20 ஆவது திருத்தத்திற்கு வாக்களிக்கமுடியாது.அதற்காக வருத்தத்தை தெரிவிக்கிறேன்” என்றும் மைத்ரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தின விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு இன்று மாலை 4 மணிமுதல் இரவு 9 மணிவரை மைத்ரி சாட்சியமளிக்கவுள்ளதாக அறியமுடிந்தது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.