க.பொ.த (உ/த) பரீட்சை எழுத இருக்கும் மாணவர்களின் நலன்கருதி கனேவல்பொல முஸ்லீம் மகா வித்யாலயத்தில் சகல பாடங்களுக்குமான வழிகாட்டல் செயலமர்வுகள்
2020ஆம் ஆண்டில் க.பொ.த (உ/த) பரீட்சை எழுத இருக்கும் மாணவர்களின் நலன்கருதி கனேவல்பொல முஸ்லீம் மகா வித்யாலயத்தில் சகல பாடங்களுக்குமான வழிகாட்டல் செயலமர்வுகள் நடைபெற்று வருகின்றன. இதன் இரண்டாவது கட்டம் கடந்த 2020.09.17 ஆம் திகதி ஆரம்பமானது. அதன் முதல் அமர்வில் தமிழ் பாடத்திற்கான கருத்தரங்கு பாடசாலை புதிய கட்டிடத்தில் நடைபெற்றது.
இதன் வளவாளராக ஆசிரியர் முஸாதிக் அவர்கள் வருகை தந்தார்கள். இக்கருத்தரங்கிற்கான சகல வசதிகளையும், உதவிகளையும் கனேவல்பொள GEDO அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. கனேவல்பொள GEDO அமைப்பு பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறுபட்ட வடிவங்களில் உதவிகள் செய்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது




Comments
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK