தம்பலகாம பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் மக்கள் காங்கிரஸில் இணைவு - FLASH NEWS - TAMIL


தம்பலகாம பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் மக்கள் காங்கிரஸில் இணைவு

ஹஸ்பர் ஏ ஹலீம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தம்பலகாமம் பிரதேச சபை  உறுப்பினர் ஹமீட் றஹீம் அவர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டார் 

ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளர் அப்துல்லா மஹ்றூப் அவர்களை ஆதரிக்கும் மக்கள் சந்திப்பு தம்பலகாமம் பிரதேச சபையின் முன்னாள்  உறுப்பினர் ஐ.நஜீமுல்லா அவர்களின் தலைமையில் நேற்று(25) முள்ளிப்பொத்தானை நகரில் இடம்பெற்றது.இதன் போது குறித்த உறுப்பினர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும்,ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான அப்துல்லா மஃறூப் முன்னிலையில் இணைந்து கொண்டார்.

இக் குறித்த சந்திப்பில், முன்னாள் தவிசாளரும் தம்பலகாம பிரதேச சபை உறுப்பினருமான தாலிப் அலி ஹாஜியார், தம்பலகாமம் பிரதேச சபையின்  உறுப்பினர்களான ஹமீட் றஹீம், ஆர்.எம்.றெஜீன், ஆசிரியர் ஐயூப் கான் மற்றும் கட்சிப் பிரமுகர்கள்  என பலர் கலந்து சிறப்பித்தனர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.