சரணடைந்தவர்களை கொலைசெய்த, கருணாவை சிறையில் அடையுங்கள் - பொன்சேக்கா ஆவேசம் - FLASH NEWS - TAMIL


சரணடைந்தவர்களை கொலைசெய்த, கருணாவை சிறையில் அடையுங்கள் - பொன்சேக்கா ஆவேசம்

கருணா தெரிவித்திருப்பது போன்று 3000 இராணுவத்தினரை அவர் கொலை செய்யவில்லை என முன்னாள் இராணுவதளபதி சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சரணடைந்த 1200 படையினரையும் கிழக்கு மாகாணத்தில் 600 பொலிஸாரையும் அவர் கொலை செய்தார் என்பது உண்மை என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

எனினும் அவர் தெரிவித்திருப்பது போன்று ஆனையிறவிலும் கிளிநொச்சியிலும் அவ்வளவு பெரும் எண்ணிக்கையில் இராணுவத்தினரை அவர் கொலை செய்யவில்லை என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இராணுவத்தில் உள்ள அனைவரையும் கொலை செய்தேன் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் அவர் பெரும் வீரராக முயல்கின்றார் ஆனால் அவர் சரணடைந்த வீரர்களையே கொலை செய்தார் என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜனபெரனமுன கருணாவிற்கு பதவி வழங்கியுள்ளது அரசாங்கம் அவரை காப்பாற்றுகின்றது எனவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கருணாவை சிறையில் அடைக்கவேண்டும் எனவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.




No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.