(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
சாய்ந்தமருது வொலிவோரியன் பொது விளையாட்டு மைதானத்தை செப்பனிடும் இரண்டாம் கட்டப் பணி கரையோர பிரதேச ஒருங்கிணைப்பு குழுத்தலைவரும் அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா தலைமையில் இன்று சனிக்கிழமை (18) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இரண்டாம் கட்ட செப்பனிடும் பணியில் பல கனரக இயந்திரங்களைக் கொண்டும் விளையாட்டுக் கழகங்களின் பங்களிப்புடனும் மைதானம் விளையாடுவதற்கு ஏற்ற வகையிலும் செப்பனிடப்பட்டு, அதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகளும் செவ்வனே இடம்பெற்றன.
செப்பனிடும் பணியானது அபூபக்கர் ஆதம்பாவா எம்.பி.யின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இன்று இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
இந்த மைதானத்தை செப்பனிடுவதற்கு இயந்திரங்களைத் தந்துதவிய கல்முனை மாநகர சபை மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை, அட்டளைச்சேனை பிரதேச சபை மற்றும் ஆதம்பாவா கன்ஸ்ட்ரக்ஷன் குழுவினருக்கும் ஆதம்பாவா எம்.பி. தனது நன்றியினைத் தெரிவித்துள்ளார்.




0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK