உலக உயர் இரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் விழிப்புணர்வு நடைபவணியும் உணவுக் கண்காட்சியும் கருத்தரங்கும் - FLASH NEWS - TAMIL

உலக உயர் இரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் விழிப்புணர்வு நடைபவணியும் உணவுக் கண்காட்சியும் கருத்தரங்கும்

 



(எம்.எஸ்.எம்.ஸாகிர்)


சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் நாளை (மே 17) உலக உயர்குருதி அழுத்த தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடைபவணியும் உணவுக் கண்காட்சியும் கருத்தரங்கும் இடம் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இந்நிகழ்வானது பிராந்திய தொற்றா நோய் கட்டுப்பாட்டுப் பிரிவின் ஏற்பாட்டில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ், சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் சனூஸ் காரியப்பர் தலைமையில், "உங்கள் இரத்த அழுத்தத்தை துல்லியமாக அளவீட்டு, அதனைக் கட்டுப்படுத்தி, நீண்ட நாட்கள் உயிர் வாழுங்கள் எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ளது.


நடைபவணி நிகழ்வு நாளை காலை 08.00 மணி முதல் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை இருந்து ஆரம்பித்து பிரதான வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு வந்து, மீண்டும் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையைச் சென்றடையும். 


அத்துடன் உயர் குருதி அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றிய உணவுக் கண்காட்சி மற்றும் அது பற்றிய கருத்தரங்கும் இதன்போது இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

News Editor-2

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்