அரிசி இறக்குமதி செய்வது குறித்து கவனம் - FLASH NEWS - TAMIL

அரிசி இறக்குமதி செய்வது குறித்து கவனம்

 


தட்டுப்பாடு இன்றி அரிசியை பெற்றுக்கொடுக்க எதிர்வரும் காலங்களில் அரிசி இறக்குமதி செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

நுகர்வோருக்கு தட்டுப்பாடு இன்றி அரிசியை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்ய பரிந்துரைத்துள்ளது.

 அறுவடை இடம்பெற்று வருகின்ற போதிலும் சந்தையில் அரிசியின் விலை அதிகரித்து வருவதை காணக்கூடியதாக இருப்பதோடு, சந்தையில் குறிப்பிட்ட சில வகை அரிசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி போதியளவு அரிசியை கையிருப்பில் வைத்திருக்கும் வகையில் அரிசியை இறக்குமதி செய்வது தொடர்பில் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுவருவது குறித்து இதன்போது ஆராயப்பட்டது.

விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த மற்றும் வர்த்தக,வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தலைமையில் உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு ஜனாதிபதி அலுவலகத்தில், செவ்வாய்க்கிழமை (01) ஐந்தாவது தடவையாக கூடியது.

மேலும், இந்த ஆண்டில் அதிக மழை பெய்தமையால், இரண்டு முறை விளைச்சல்களுக்கு சேதம் ஏற்பட்டு, எதிர்பார்த்த அறுவடையில் கணிசமான அளவு குறைந்துள்ளதும் இங்கு குறிப்பிடப்பட்டது.

கால்நடை உணவிற்கு முறையற்ற விதத்தில் அரிசியைப் பயன்படுத்துவதே அரிசி தட்டுப்பாட்டுக்கு மற்றொரு முக்கிய காரணம் எனவும், கால்நடை உற்பத்தித் தொழிலில் கால்நடை உணவுத் தேவைக்காக உடைத்த அரிசியை இறக்குமதி செய்வது மற்றும் மாற்று உணவுகளை பயன்படுத்துவது குறித்தும் குழு கவனம் செலுத்தியது.

அதன்படி, உரிய நடைமுறைகளைப் பின்பற்றி தேவையான அளவு உடைந்த அரிசியை இறக்குமதி செய்ய விவசாய அமைச்சின் பணிப்பாளர் தலைமையிலான குழுவை அமைப்பதற்கும் உணவுப் பாதுகாப்புக் குழு அனுமதி வழங்கியது.

பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார மற்றும் அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்

News Editor-2

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்