தரைமட்டமான கட்டடங்கள் : 1000-க்கும் அதிகமானோர் மரணம் - FLASH NEWS - TAMIL

தரைமட்டமான கட்டடங்கள் : 1000-க்கும் அதிகமானோர் மரணம்


 மியான்மர் நாட்டில் வரலாறு காணாத அளவுக்கு மிகப் பெரிய ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது அங்கு வரலாறு காணாத பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே மியான்மர் தலைநகர் நேபிடாவில் உள்ள 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குப் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

மியான்மர் நாட்டில் நேற்று 7.7 ரிக்டரில் பூகம்பம் ஏற்பட்ட நிலையில், பிறகுச் சற்று நேரத்தில் அங்கு 6.4 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் அங்கு வரலாறு காணாத பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலும் பூகம்பம் உணரப்பட்டு இருக்கிறது. இது மட்டுமின்றி இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் கூட பூகம்பம் உணரப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

இதற்கிடையே மியான்மர் தலைநகர் நேபிடாவில் உள்ள 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை பேரழிவின் மையப் பகுதியாக உருவெடுத்து இருக்கும் என அஞ்சப்படுகிறது. அங்கு எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறித்த துல்லியமான தகவல்கள் இல்லை. இருப்பினும், அங்கு அதிக மக்கள் உயிரிழந்து இருக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதான் அந்த நகரத்திலேயே மிகப் பெரிய மருத்துவமனை என்றும் சொல்லப்படுகிறது

மியான்மர் மட்டுமின்றி தாய்லாந்து நாட்டிலும் பாதிப்புகள் மோசமாக இருக்கிறது. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு, வடக்கு தாய்லாந்து வரை நிலநடுக்கம் உணரப்பட்டது. அங்கு பாங்காக்கில் சில மெட்ரோ சேவைகள் நிறுத்தப்பட்டன. 

மேலும், தாய்லாந்தின் பாங்காக் பகுதியில் அரசு அலுவலகங்களுக்காக 30 மாடிக் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. அந்த கட்டிடம் ஒரே நொடியில் இடிந்து தரைமட்டம் ஆகியிருக்கிறது. அதன் உள்ளே 43 தொழிலாளர்கள் உள்ளே சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது

News Editor-2

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்